துபாயில் அமலுக்கு வந்த அபராதத்துடன் கூடிய புதிய போக்குவரத்து விதிமீறல் சட்டம் குறித்து தெரிந்துகொள்வோம் ..!

துபாயில் திருத்தப்பட்ட அபராதத்துடன் புதிய போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அமீரகத்தில் உள்ள தனிநபர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனங்களைக் கைப்பற்றுவது தொடர்பான 2015 ஆம் ஆண்டின் ஆணை எண். 29 இன் சில விதிகளைத் திருத்தியமைத்து 2023 ஆம் ஆண்டின் ஆணை எண். 30 வெளியிடப்பட்டது.

அதன்படி, சாலையில் கடுமையான விதிமீறல்களைச் செய்யும் உரிமையாளர்கள் இனி கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள்.

👉🏻 முன் அனுமதியின்றி சாலை ரேஸ்களில் பங்கேற்கும் வாகனங்கள் மற்றும் நடைபாதைகளில் செல்லும் பொழுதுபோக்கு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை புதிய திருத்தத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும். மேலும், ரேஸில் ஈடுபடும் வாகனத்திற்கு 100,000 திர்ஹம்கள் மற்றும் நடைபாதையில் செல்லும் பொழுதுபோக்கு மோட்டார் சைக்கிள்களுக்கு 50,000 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும்.

👉🏻 கனரக டிரக்கின் டிரைவர் சிவப்பு சிக்னலைத் தாண்டினால் அவர் வெளிநாட்டவராக இருந்தால் நாடு கடத்தப்படுவார்.

👉🏻 சிவப்பு சிக்னலை மீறுபவர்களுக்கு 50,000 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும்.

👉🏻 வேக வரம்பை அதிகரிக்கும் வகையில் அல்லது ஓட்டும் போது அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை இனி போலீசார் பறிமுதல் செய்வார்கள்.

👉🏻 போக்குவரத்து அபராதம் 6,000 திர்ஹம்களுக்கு மேல் இருந்தால், போலி வாகன எண் அல்லது தெளிவற்ற வாகன எண்ணுடன் வாகனம் ஓட்டப்பட்டால், அந்த வாகனம் துபாய் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும்.

👉🏻 அஜாக்கிரதையாக ஓட்டும் வாகனம், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயலும் வாகனங்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் சாலையில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

👉🏻 ரேஸ் பந்தயத்தைப் பார்க்க கூடும் அல்லது காட்சிக்காக பந்தயங்களில் ஈடுபடும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

👉🏻 அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி கண்ணாடி பொருத்தப்பட்ட வாகனங்கள், அனுமதியின்றி வாகனத்தின் முன் கண்ணாடியில் டின்ட் அடிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

👉🏻 போலீஸ் வாகனத்தை வேண்டுமென்றே மோதி அல்லது சேதப்படுத்தும் வாகனம் மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் ஓட்டும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, துபாய் காவல்துறையால் நிர்ணயிக்கப்பட்ட பிற நிபந்தனைகளின்படி வாகனத்திற்கான அனைத்து அபராதங்களையும் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அதன் உரிமையாளர் செய்த அனைத்து மீறல்களுக்கும் அபராதம் செலுத்தினால் மட்டுமே விடுவிக்க முடியும்.

புதிய திருத்தங்களின் நோக்கம் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வது, விபத்துகளை குறைப்பது மற்றும் சாலைகளில் பாதுகாப்பான சூழலை மேம்படுத்துவது ஆகும். வாகனங்களை சட்ட மற்றும் கட்டாயமாக பறிமுதல் செய்வதற்கான சிறப்பு வழக்குகளுக்கு இந்த உத்தரவு வழங்குகிறது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button