காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் – ஐவரும் பலி ?

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க கடலோர கடற்படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க கடலோர கடற்படை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் டைட்டானிக் கப்பல் சுற்றுலா தொடர்பாக காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் குறித்த சர்வதேச தேடல் தற்போது கடுமையான சூழ்நிலையில் நிறைவு பெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

📲 விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்⬇️
https://chat.whatsapp.com/EyNrIkgvEHU91wVsu2RUA5

🟥 தயவுசெய்து இணையாதவர்கள் மாத்திரம் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button